
சுருட்டப்பள்ளியில் குரு பெயர்ச்சி விழா
ஊத்துக்கோட்டை, மே 8:
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு இடபெயர்ச்சியையொட்டி கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நேற்று காலை நடந்தது. பால், தயிர், சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. 12 ராசிகளை சேர்ந்தவர்கள் அர்ச்சனை செய்தனர்.
வடபழனி ராஜன் குருக்கள் தலைமையில் கார்த்திகேசவ சிவாச்சாரியார், அய்யப்பன், விசுவநாதன், பாலச்சந்தர் ஆகியோர் விநாயகர், வால்மிகீஸ்வரர், மரகதாம்பிகா, பள்ளிகொண்டீஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். கோயில் சேர்மன் ஏ.வி.எம்.முனிசேகரரெட்டி உட்பட ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment