Monday, July 11, 2011

ஊத்துக்கோட்டை புனித அடைக்கல மாதா தேவாலய 22ம் ஆண்டு தேர் திருவிழா





ஊத்துக்கோட்டை புனித அடைக்கல மாதா ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாதா ஊர்வலத்தில் சிறுவர்கள், பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அடுத்தபடம்: வெள்ளி தேரில் உலா வந்த மாதா.
ஊத்துக்கோட்டை புனித அடைக்கல மாதா தேவாலய 22ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பாலகர்கள் தினம், மறைக்கல்வி தினம், குடும்பங்கள் தினம், சுகம் தரும் தினம் கொண்டாடப்பட்டது.
நேற்று முன்தினம் வெள்ளி தேரில் அடைக்கல மாதா ஊர்வலம் நடந்தது. தேருக்கு முன்பாக பெண்கள், சிறுவர்கள் மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி சென்றனர். இறுதிநாளான நேற்று பங்கு தந்தை பெலிக்ஸ் பிலிப் தலைமையில் பாதிரியார்கள் லியோ, ஜேம்ஸ், உபால் தூஸ், பீட்டர் ராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர்.
விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பிறகு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. ஆலய நிர்வாகிகள் அந்தோணி குரூஸ், குமார், அந்தோணி ராஜ், பாக்யராஜ், ராபர்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.