Friday, July 22, 2011

பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழா


பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடித் திருவிழா 10 வாரங்கள் நடைபெறும். திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பாரதி கூறியதாவது:
ஆடித் திருவிழாவையொட்டி, பெரியபாளைம் பவானியம்மன் கோயிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், டிராக்டர், மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானோர் வருவார்கள். சனி, ஞாயிற்று கிழமைகளில் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
10 வாரங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2 டிஎஸ்பி தலைமையில், 5 இன்ஸ்பெக்டர், 16 சப் இன்ஸ்பெக்டர், 8 பெண் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் கனரக வாகனங்கள் ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையிலும், ஆந்திராவில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டையிலும் திருப்பி விடப்படும்.