ஊத்துக்கோட்டை மையப்பகுதியில் உள்ள அண்ணா சிலையை சுற்றி சென்னை, திருவள்ளூர், திருப்பதி, சத்தியவேடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நான்கு வழி சந்திப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதமாக சிக்னல் செயல்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் இஷ்டப்படி செல்கிறார்கள். தினமும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.