Saturday, September 3, 2011

திருவள்ளூர் புறநகர் பகுதிகளில் மின் நிறுத்த நேரம்


ஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு 15 கணினி வழங்கப்பட்டது


ஊத்துக்கோட்டையில் 1981ல் அறிஞர் அண்ணா மருத்துவமனை கட்டப்பட்டது. ஊத்துக்கோட்டையில் வசிக்கும் 15,000க்கும் மேற்பட்டோர் மற்றும் தாராட்சி, பாலவாக்கம், செஞ்சி அகரம், பனப்பாக்கம், போந்தவாக்கம், அனந்தேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
நாளுக்குநாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் மருத்துவமனையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், 2009ம் ஆண்டு ரூ.73.75 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
மருத்துவமனையில் 3 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஒரு டாக்டர், திங்கள், செவ்வாய் கிழமைகளில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார். இதனால், ஒரு டாக்டர் மட்டுமே சிகிச்சை அளிக்கிறார். இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுகின்றனர்.



மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஓ.பி. சீட்டு வழங்கப்படுகிறது. இதை பெற நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வந்தனர். இதை தவிர்க்க மருத்துவமனைக்கு 15 கணினி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஓ.பி. சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. டாக்டரும் மருந்து, மாத்திரை பெயர்களை கணினியில் பதிவு செய்து கொடுக்கிறார்.

ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்க பணி

ஊத்துக்கோட்டை அருகேயுள்ள தேர்வாய் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு வாகன பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஜனப்பன்சத்திரம் முதல் சூளைமேனி வரை செல்லும் இருவழி சாலையை, நான்கு வழி சாலையாக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து, ரூ.80 கோடியில் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு தேவையான இடம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. சாலையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் அடியோடு அகற்றப்பட்டு வருகிறது.
சூளைமேனியில் இருந்து ஜனப்பன்சத்திரம் வரை சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு உள்ள மரங்களை பொக்லைன் மூலம் அகற்றி வருகின்றனர்.

Uthukottai Ganesh Chaturthi

ஊத்துக்கோட்டையில் வீதி உலா வந்த விநாயகரை தரிசிக்க கூடி நிற்கும் பெண்கள்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விநாயகர் கோயில்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ஊத்துக்கோட்டையில் உள்ள ஆனந்தவல்லி சமேத நீலகண்டேஸ்வரர் கோயிலில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. மாலையில், ஐந்தடி உயரமுள்ள மான் மீது அமர்ந்த விநாயகர் சிலையை டிராக்டரில் வைத்து, ஊர்வலமாக சென்றனர்.
விழாக்குழு தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராசமாணிக்கம்,ஊர் பெரியவர் திருத்தணி ரெட்டியார், ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ரெட்டி தெரு, செட்டி தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. வழியெங்கும் பக்தர்கள், விநாயகருக்கு பூஜை செய்தனர்.பின்னர், ஊத்துக்கோட்டையில் உள்ள ஏரியில் விநாயகர் சிலையை கரைத்தனர். பல பகுதிகளில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சிலைகள் இங்கு கரைக்கப்பட்டன.