Saturday, September 3, 2011

ஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு 15 கணினி வழங்கப்பட்டது


ஊத்துக்கோட்டையில் 1981ல் அறிஞர் அண்ணா மருத்துவமனை கட்டப்பட்டது. ஊத்துக்கோட்டையில் வசிக்கும் 15,000க்கும் மேற்பட்டோர் மற்றும் தாராட்சி, பாலவாக்கம், செஞ்சி அகரம், பனப்பாக்கம், போந்தவாக்கம், அனந்தேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
நாளுக்குநாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் மருத்துவமனையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், 2009ம் ஆண்டு ரூ.73.75 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
மருத்துவமனையில் 3 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஒரு டாக்டர், திங்கள், செவ்வாய் கிழமைகளில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார். இதனால், ஒரு டாக்டர் மட்டுமே சிகிச்சை அளிக்கிறார். இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுகின்றனர்.



மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஓ.பி. சீட்டு வழங்கப்படுகிறது. இதை பெற நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வந்தனர். இதை தவிர்க்க மருத்துவமனைக்கு 15 கணினி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஓ.பி. சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. டாக்டரும் மருந்து, மாத்திரை பெயர்களை கணினியில் பதிவு செய்து கொடுக்கிறார்.

No comments:

Post a Comment