Sunday, July 24, 2011

குதிரை வாகனத்தில் பவானியம்மன் திருவீதியுலா


ஊத்துக்கோட்டை, ஜூலை 25:


ஆடி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமை என 10 வாரங்கள் தொடர்ந்து விழா நடைபெறும். உள்ளூர் மற்றும் வெளியூர், பிற மாநில பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொள்வார்கள். கோயிலில் தங்கியிருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

பவானியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவின் 2 வாரமான நேற்று காலை அம்மனுக்கு மலர், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மாலை குதிரை வாகனத்தில் ராஜபார்ட் அலங்காரத்தில் பவானியம்மன் திருவீதியுலா வந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் கூழ் ஊற்றினர். விழாவையொட்டி, ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்கள் ஊத்துக்கோட்டை மற்றும் ஜனப்பன்சத்திரம் வழியாக திருப்பி விடப்பட்டன.