ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு 4 பேரும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு 58 பேரும் போட்டியிடுகின்றனர்.
முதன் முதலாக பேரூராட்சியில் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், மாதிரி வாக்குப்பதிவு குறித்து செயல் அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான நவநீதகுமார் விளக்கினார். மின்னணு இயந்திரத்தில் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதையும் அவர் காண்பித்தார்.
நவநீதகுமார் கூறுகையில், 30 வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் வந்துள்ளன.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவுக்கு முன்பு வாக்குச்சாவடி முகவர்களுக்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்தி காண்பிக்கப்படும்� என்றார்.
நிகழ்ச்சியில், தலைவர் பதவி வேட்பாளர்கள் ஆப்தாப் பேகம் ரஷீத் (திமுக), பத்மாவதி (அதிமுக), சாந்தி (தேமுதிக), பத்மினி (காங்கிரஸ்) மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆப்தாப் பேகம் ரஷீத் (திமுக):
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, பேரூராட்சி அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்த மின்னணு இயந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை
2. பாஸ்போர்ட்
3. 31.5.11ம் தேதி வரை வழங்கப்பட்ட வாகன ஓட்டுனர் உரிமம்
4. வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை
5. மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்பட அடையாள அட்டை
6. 31.5.11ம் தேதி வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பொதுத்துறை வங்கி, அஞ்சலக பாஸ் புத்தகம், கிஸான் பாஸ் புத்தகம்
7. கடந்த 31.5.11ம் தேதி வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய உத்தரவு புத்தகம், முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதிய புத்தகம், முன்னாள் ராணுவத்தினரின் விதவைகள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றுகள்
8. தியாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
9. சொத்து தொடர்பாக வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரங்கள்
10. கடந்த 31.5.11 வரை உரிய அலுவலரால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான சான்று
11. புகைப்படத்துடன் கூடிய துப்பாக்கி உரிமம்
12. கடந்த 31.5.11 வரை உரிய அலுவலரால் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்று
13. கடந்த 31.5.11 வரை புகைப்படத்துடன் வழங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை
14. தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகள்.
இத்தகவலை கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.