Tuesday, May 10, 2011

+2 result


விவேகானந்தா பள்ளி
100 சதவீத தேர்ச்சி
ஊத்துக்கோட்டை விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 107 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி நீரஜா 1131 மார்க் எடுத்து பள்ளியில் முதலிடத்தையும், மாணவன் கார்த்திக், மாணவி இஸ்ராவனி 1120 மார்க் எடுத்து 2வது இடத்தையும், கோபிநாத் (1111) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
கணக்கு, வேதியியல் பாடங்களில் நீரஜா 200 மதிப்பெண் பெற்றுள்ளார். 29 மாணவர்கள் ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்கள் பாபு, வெங்கடேஷ் ஆகியோர் கணக்கு பாடத்தில் 200 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
சாதனை புரிந்த மாணவர்களை பள்ளி தாளாளர் ரங்கநாதன், தலைமை ஆசிரியர் ரத்னாபாய் பாராட்டினர்.

ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 75 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவன் சதாம் உசேன் 1071 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், பசுபதி (1000), வினோத்குமார் (971) மதிப்பெண் எடுத்து 2, 3வது இடத்தையும் பிடித்தனர். மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மகேந்திரகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
ஊத்துக்கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 81 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவி பிரியா, சரண்யா ஆகியோர் தலா 1127 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாலதி 1121 இரண்டாவது, தமிழ்ச்செல்வி 1039 மூன்றாம் இடமும் பிடித்தனர். தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி ரம்யா (1013) முதலிடத்தையும், கார்த்திக் (980) இரண்டாம், பார்த்திபன் (951) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ரோகிணி பாராட்டு தெரிவித்தார்.



No comments:

Post a Comment