Thursday, September 22, 2011

Uttukkottai panchayat town who is president?(ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு?)

ஊத்துக்கோட்டை : அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி பதவிக்கு, அ.தி.மு.க.,வினரிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. சட்டசபைத் தேர்தல்படி, இங்கு 7,893 ஓட்டுகள் உள்ளன. தற்போது தி.மு.க.,வைச் சேர்ந்த, அபிராமி தலைவராக உள்ளார். அடுத்த மாதம் 24ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது.கடந்த முறை போல் இல்லாமல், இம்முறை பேரூராட்சி தலைவர் பதவியை, பொதுமக்களே ஓட்டு போட்டு தேர்வு செய்யப்பட வேண்டும். தி.மு.க., சார்பில் தற்போதைய பேரூராட்சித் தலைவர் அபிராமி மற்றும் தேவிவெங்கடேசன், ஆப்தாபேகம்ரஷீத் ஆகியோர் தி.மு.க., தலைமையிடம் தலைவர் பதவி கேட்டு மனு செய்துள்ளனர். அ.தி.மு.க., சார்பில் தற்போதைய நகரச் செயலர் ராஜமாணிக்கம் மனைவி பத்மாவதி, நகர ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் சக்திவேல் மனைவி மஞ்சுளாதேவி, முன்னால் கவுன்சிலர் கனகவல்லி மற்றும் பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலர் சுப்பிரமணி மனைவி மீனா ஆகியோர் தலைமையிடம் மனு கொடுத்துள்ளனர்.தி.மு.க., சார்பில், தற்போதைய தி.மு.க., கவுன்சிலர் மனைவி ஆப்தாபேகம் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அ.தி.மு.க.,வில் பத்மாவதிக்கும், மஞ்சுளாதேவிக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தங்களது தலைமையில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கும் என, அ.தி.மு.க., தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Uttukkottai: at next month's local elections, panchayat town uttukkottai office, AIADMK, has severe vinaritaiye. Uttukkottai panchayat town, and there are 15 wards. Tertalpati assembly, there are 7.893 votes. The DMK, put together, is President of Abhirami.next month, with 24, next month's local elections varavullatu. Unlike last time, this time a panchayat town chairmanship, should be chosen to drive potumakkale. DMK, on ​​behalf of the panchayat town Abirami and tevivenkatecan, aptapekamrasit the DMK, have led to a petition asking the president.
AIADMK, on ​​behalf of the City Secretary rajamanikkam wife Padmavati, Joint Secretary of the Council of the City video manculatevi Sakthivel's wife, the former secretary of the Council of video cuppiramani panchayat town councilor and his wife Meena kanakavalli petition given to the Chief. DMK, on ​​behalf of , the DMK, is expected to compete aptapekam Councillor wife.

No comments:

Post a Comment