பவானியம்மன் கோயிலில் 4வது வார ஆடி திருவிழா :
பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. 4வது வாரமான நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், வேப்பிலை ஆடை கட்டி அங்கப்பிரதட்சணம் செய்தும் பெண்கள் வழிபட்டனர். ஆடு, கோழி பலியிட்டு நேர்த்தி செலுத்தினர்.
நேற்று காலை பவானியம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. மாலையில், சிம்ம வாகனத்தில் மகிஷா சூரமர்த்தினியாக அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment